ஊழல் வழக்கு : அதிமுக முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி குற்றவாளி என தீர்ப்பு

ஊழல் வழக்கு : அதிமுக முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி குற்றவாளி என தீர்ப்பு
ஊழல் வழக்கு : அதிமுக முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி குற்றவாளி என தீர்ப்பு

ஊழல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி உள்ளிட்ட 3 பேர் குற்றவாளிகள் என சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளி நடத்துவதாகக்கூறி இந்திரகுமாரியின் கணவர் பாபு அரசிடம் இருந்து ரூ.15.45 லட்சம் முறைகேடாக பெற்றதாக வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி, அவரின் கணவர் பாபு, சண்முகம் ஆகியோர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 1991 -96 காலகட்டத்தில் அதிமுக ஆட்சியில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்தபோது இந்த முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

 வழக்கில் தொடர்புடைய கிருபாகரன் என்பவர் இறந்துவிட்ட நிலையில் வெங்கடகிருஷ்ணன் என்பவர் விடுவிக்கப்பட்டார். குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட் 3 பேருக்கான தண்டனை விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி அறிவித்துள்ளார். குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி தற்போது திமுகவில் இருந்து வருகிறார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com