Published : 29,Sep 2021 07:35 AM

ஸ்பெயினில் மீண்டும் வெடித்துச் சிதறும் எரிமலை

Volcano-erupting-again-in-Spain

ஸ்பெயினில் எரிமலை வெடித்ததில், எரிமலைக் குழும்பு தொடர்ந்து வெளியேறி வருகிறது.

லா பால்மா தீவில் உள்ள எரிமலை கடந்த 19 ஆம் தேதி வெடித்தது. சில நாட்கள் அமைதி காத்த எரிமலை, மீண்டும் லாவா என்னும் எரிமலைக் குழம்பை கொப்பளிக்கத் தொடங்கியுள்ளது. இந்த எரிமலைக் குழம்பு ஆறு போல ஓடி அட்லாண்டிக் கடலை நோக்கிச் சென்றது. லாவா ஓடிய பாதையில் இருந்த 600க்கும் அதிகமான வீடுகள், வாழைத்தோட்டங்கள், வழிப்பாட்டு தலங்கள் கடுமையாக சேதமடைந்தன. இந்த நிலையில், முதல்கட்டமாக 10.5 மில்லியன் யுரோவை நிவாரண நிதியாக ஸ்பெயின் அரசு விடுவித்துள்ளது.

இதனைப்படிக்க..."அமேசான் குறித்து ஆர்எஸ்எஸ்-ன் கருத்து அர்த்தமற்றது" - காங்கிரஸ்