[X] Close

பாண்ட்யா மீது 120 சதவிகித நம்பிக்கை: கோலி கூல்

we-have-120--faith-in-Pandya

இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 171 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் வெளிநாட்டில் நடைபெற்ற தொடர் ஒன்றில் முதன்முறையாக அனைத்து போட்டிகளிலும் வென்று இந்திய அணி சாதித்தது. 

வெற்றிக்கு பின்னர் இந்திய அணி கேப்டன் விராத் கோலி பேசும்போது, ‘நாங்கள் வெற்றி பெற்று வருவதால் அணியில் உத்வேகம் இருந்து வருகிறது. நாங்கள் களத்தில் இறங்கி விட்டால் எதிர்காலம் குறித்து அதிகம் நினைப்பது கிடையாது. நாட்டுக்காக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுகிறோம் என்பதை மட்டுமே மனதில் வைத்து செயல்படுகிறோம். எங்களது இந்த மனநிலை இதுவரை மாறவில்லை. எந்த அணியும் சிறப்பாக செயல்பட்டால் இதுபோன்ற வெற்றியை பெற முடியும். இந்தப் போட்டியில் பாண்ட்யாவின் ஆட்டம் சிறப்பானது. கடைசி கட்ட வீரராக இறங்கி அவர் சதமடித்த விதம் சாதாரண விஷயமல்ல. அது புத்திசாலித்தனமான ஆட்டம். அவர் மீது நாங்கள் 120 சதவிகித நம்பிக்கை வைத்துள்ளோம். குல்தீப் யாதவும் திறமையான பந்துவீச்சாளர். அவர்
அருமையாக பந்துவீசினார்’ என்றார்.


Advertisement

Advertisement
[X] Close