[X] Close

தமிழ்நாட்டில் புதிதாக 1,630 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கொரோனா வைரஸ்

Tamilnadu-today-covid-cases-update

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 1,630 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. 1,50,725 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில், 1,630 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனா உறுதிசெய்யப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 26,60,553 என்றாகியுள்ளது. முன்னதாக நேற்றைய தினம் பாதிப்பு 1,657 என்றிருந்த நிலையில், தற்போது அது சற்று குறைந்திருக்கிறது.


Advertisement

மாவட்ட அளவிலான பாதிப்புகளை பொறுத்தவரையில், அதிகபட்சமாக சென்னையில் 184 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அதன் தொடர்ச்சியாக கோவையில் 183 பேர், ஈரோட்டில் 121 பேர், செங்கல்பட்டில் 117 பேர், தஞ்சையில் 90 பேர், திருப்பூரில் 86 பேர் என தொற்று உறுதிசெய்யப்பட்டோர் எண்ணிக்கை நீண்டுள்ளது.

image


Advertisement

கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி கடந்த 24 மணி நேரத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை கொரோனாவால் தமிழகத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35,526 என உயர்ந்துள்ளது. இன்று இறந்தவர்களில் அரசு மருத்துவமனையை சேர்ந்தவர்கள் 12 பேர், தனியார் மருத்துவமனையை சேர்ந்தவர்கள் 5 பேர் ஆவர்.

இதையும் படிங்க... 13 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளில் அதிருப்தி - தலைமைச் செயலர் கடிதம்

அதேபோல 24 மணி நேரத்தில் 1,643 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் தற்போது சிகிச்சையிலிருப்போர் எண்ணிக்கை 17,231 என்றாகியுள்ளது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close