[X] Close

உள்ளாட்சித் தேர்தல்: எனக்கு வாக்களிக்க வேண்டாம் என வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட காந்தியவாதி

தமிழ்நாடு

Local-elections-Gandhian-who-was-involved-in-the-polls-saying-do-not-vote-for-me

ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் காந்தியவாதி ரமேஷ் தனக்கு வாக்களிக்க வேண்டாம் என பொதுமக்கள் இடையே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.


Advertisement

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் பகுதியில் 6 வது வார்டு மாவட்ட கவுன்சிலர் உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில், பாச்சல் பகுதியைச் சேர்ந்த காந்தியவாதி ரமேஷ் அகிம்சா சோசியலிஸ்ட் கட்சி சார்பில் பஸ் சின்னத்தில் போட்டியிடுகிறார்.

image


Advertisement

இந்த நிலையில் ராசிபுரம் அடுத்த கட்டனாச்சம்பட்டி பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது யாரும் தனக்கு வாக்களிக்க வேண்டாம் என பொதுமக்கள் இடையே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மேலும் தான் ஆட்சிக்கு வந்தால் லஞ்சம், ஊழலை ஒழித்து விடுவேன். லஞ்சம் ஊழல் ஆட்சி வேண்டுமென்றால் தனக்கு மறந்து கூட வாக்களிக்க வேண்டாமென்று பொதுமக்களிடம் துண்டு பிரச்சுரம் கொடுத்து வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார்.


Advertisement

Advertisement
[X] Close