
சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனுக்கு தனிச் சிறப்பு மிக்க சேவைக்கான குடியரசுத் தலைவர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்தர தினத்தை முன்னிட்டு தமிழக காவல்துறை அதிகாரிகளுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்திலிருந்து சென்னை மாநகர ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், கூடுதல் ஆணையர் எஸ்.என்.சேஷசாயி மற்றும் சிஐடி பிரிவு கூடுதல் எஸ்பி சி.ராஜா ஆகியோருக்கும் குடியரசுத் தலைவர் பதக்கம் வழங்கப்பட உள்ளது. நாடெங்குமிருந்து மொத்தம் 93 காவல்துறை மற்றும் துணை ராணுவப்படை அதிகாரிகள் தனிச் சிறப்பு மிக்க சேவைக்காக குடியரசுத் தலைவர் பதக்கம் பெற உள்ளனர். இது தவிர சிறப்பான காவல் சேவைக்காக தமிழகத்திலிருந்து 23 காவல் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளன.