[X] Close

ஐபிஎல்லில் இன்று 2 போட்டிகள்: மும்பை Vs பஞ்சாப்; கொல்கத்தா Vs டெல்லி

விளையாட்டு

There-will-be-two-matches-in-the-IPL-cricket-series-today
அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன.
 
ஷார்ஜாவில் பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. புள்ளிகள் பட்டியலில் டெல்லி அணி 2ஆவது இடத்திலும், கொல்கத்தா அணி 4ஆவது இடத்திலும் உள்ளது. இவ்விரு அணிகளும் இதுவரை 27 முறை நேருக்கு நேர் களம் கண்டுள்ளன. அவற்றில் கொல்கத்தா அணி 14 முறையும், டெல்லி அணி 12 முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டியில் முடிவு ஏதும் எட்டப்படவில்லை.
 
image
இரவு 7.30 மணிக்கு அபுதாபியில் நடைபெறும் மற்றொரு போட்டியில் ரோகித் தலைமையிலான மும்பை அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியும் களம் காண்கின்றன. புள்ளிகள் பட்டியலில் டாப் ஆர்டரில் இருந்த மும்பை அணி தற்போது 7ஆவது இடத்துக்கு பின்தங்கியுள்ளது. பஞ்சாப் 5ஆவது இடத்தில் உள்ளது. இவ்விரு அணிகளும் இதுவரை 27 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அவற்றில் மும்பை அணி 14 போட்டிகளிலும், பஞ்சாப் அணி 13 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
 

Advertisement

Advertisement
[X] Close