Published : 28,Sep 2021 11:32 AM

நெல்லை: ப்ரீ பயர் கேம் விளையாடியதை பெற்றோர் கண்டித்ததால் மாணவன் எடுத்த விபரீத முடிவு

Nellai-The-student-made-a-bizarre-decision-after-his-parents-condemned-him-for-playing-a-free-fire-game

திசையன்விளை அருகே மன்னார்புரத்தில் ப்ரீ பயர் கேம் விளையாடியதை பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே மன்னார்புரம், இந்திரா நகரில் குடியிருந்து வருபவர் வள்ளிமயில். வள்ளிமயிலுக்கு 2 மகன்களும் 1 மகளும் உள்ளனர். மூத்த மகன் சஞ்சய் (15) மன்னார்புரம் அருகில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார்.

image

இந்நிலையில் சஞ்சய் செல்போனில் தடை செய்யப்பட்ட ப்ரீ பயர் ஆன்லைன் கேம் விளையாடியதாக கூறப்படுகிறது. இதை பார்த்த பெற்றோர் மாணவரை கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த மாணவன் சஞ்சய் பெற்றோர் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திசையன்விளை போலீசார், மாணவனின் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்