[X] Close

' இளம் மருத்துவர்களை கால்பந்து போல கருதாதீர்கள்' - உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி

இந்தியா

Supreme-Court-judges-have-expressed-displeasure-that-young-doctors-taking-part-in-the-NEED-exam-for-super-specialty-medical-courses-should-not-be-treated-like-football
சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வில் பங்கேற்கும் இளம் மருத்துவர்களை கால்பந்து போல கருதாதீர்கள் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
 
சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்விற்கான பாடத்திட்டங்கள் கடைசி நிமிடத்தில் மாற்றப்பட்டிருப்பதாகவும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 41 முதுநிலை மருத்துவ படிப்பு முடித்த மருத்துவர்கள் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்கள். இந்த வழக்கு மீண்டும் உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
 
image
அப்போது தேர்வுக்கான அறிவிப்புகள் வெளியிட்டதற்கு பிறகு பாடத்திட்டங்களை மாற்றியது ஏன்? இந்த மாற்றத்தை அடுத்த ஆண்டு ஏன் மேற்கொள்ள முடியாது? சில மாதங்களை தேர்வுக்கு இருக்கும் நிலையில் மாணவர்கள் இதற்கு எப்படி தயாராவார்கள்? என பல்வேறு கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள் அதிகாரம் இருக்கிறது என்பதற்காக இளம் மருத்துவர்களை கால்பந்தை போல கருதாதீர்கள் என கூறினர். இந்த வழக்கின் விசாரணை வரும் திங்கள் கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
 
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close