சசிகலா நினைத்திருந்தால் டிசம்பர் 5ம் தேதியே முதல்வராகி இருப்பார்: டிடிவி தினகரன்

சசிகலா நினைத்திருந்தால் டிசம்பர் 5ம் தேதியே முதல்வராகி இருப்பார்: டிடிவி தினகரன்
சசிகலா நினைத்திருந்தால் டிசம்பர் 5ம் தேதியே முதல்வராகி இருப்பார்: டிடிவி தினகரன்


மதுரை மாவட்டம் மேலூரில் அதிமுக ‌அம்மா அணி சார்பில் டிடிவி தினகரன் தலைமையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தங்க தமிழ்ச்செல்வன், செந்தில்பாலாஜி உள்ளிட்ட 14 எம்எல்ஏக்களும், நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட 5 எம்பிகளும் பங்கேற்றனர். 

இந்த விழாவில் பேசிய டிடிவி தி‌னகரன், 1977ஆம் ஆண்டு ஊழல் குற்றச்சாட்டால் கருணாநிதியால் எம்ஜிஆர் கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டார். ஆனால் அதன்பிறகு மக்கள் கருணாநிதியை ஒதுக்கி வைத்தனர். ஏழை எளிய மக்களுக்காக பல்வேறு திட்டங்களை உருவாக்கித் தந்ததால் தொடர்ந்து 3 முறை எம்.ஜிஆரை முதல்வராக மக்கள் தேர்ந்தெடுத்தார்கள். அவரது மறைவிற்கு பிறகு அதிமுக இரண்டாக பிளவுபட்டது. பிறகு ஜெயலலிதா 1989ஆம் ஆண்டு இரட்டை இலைச்சின்னத்தை மீட்டெடுத்தார். 1991 முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெயலலிதா 2011ல் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் முதலமைச்சாராக இருந்து தமிழகத்தில் நலனுக்காக பல திட்டங்களை கொடுத்துச் சென்றிருக்கிறார். அவர் கொண்டு வந்த திட்டங்களை பிற மாநிலங்களும் பின்பற்றி வருகின்றன. அவரது மறைவிற்கு பிறகு சசிகலா மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சி தமிழகத்தில் தொடவேண்டும் என நோக்கத்தோடு செயல்பட்டார். அவர் நினைத்திருந்தால் டிசம்பர் 5ம் தேதியே சட்டமன்ற உறுப்பினர்களால் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பார். தமிழகத்தின் நலன் கருதி அவர் வேறொருவரை முதல்வராக கைகாட்டினார். அடுத்த சில மாதங்களில் சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா முதல்வராக பதவியேற்க முடியாமல் போனது. அந்த கஷ்டமான சூழலிலும் பெங்களூருக்கு சென்ற கால கட்டத்திலும் ஜெயலலிதாவின் ஆட்சி தொடர வேண்டும் என அவரால் சுட்டிக்கட்டப்பட்ட ஒருவர் முதல்வராக நியமிக்கப்பட்டார்.  

சசிகலா உடலால் இல்லாவிட்டாலும் உள்ளத்தால் அவர் மேலூரில் இருப்பதாகக் கருதி நீங்கள் இங்கே வந்திருக்கிறீர்கள். அவர் நினைத்திருந்தால் என்னையோ அல்லது எங்கள் குடும்பத்தில் ஒருவரையோ முதல்வராக ஆக்கிச் சென்றிருக்கலாம். பதவிக்காக நாங்கள் அல்ல என்பதை புரியாத சிலர், இந்த ஆட்சிக்கு பாதகம் வந்து விடும் என பிதற்றிக்கொண்டிருக்கிறார்கள். பொதுச்செயலளார் அவர்கள் பெங்களூருக்கு சென்ற சில தினங்களிலேயே அவரின் பேனரை எடுத்து விட்டார்கள். அவர் மட்டும் இல்லாவிட்டால் இந்த ஆட்சி நிலைத்திருக்குமா என்பதை யோசித்து பார்க்க வேண்டும். நம்மால் உருவாக்கப்பட்ட ஆட்சியில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை கொண்டாடுவது பாவப்பட்ட செயலா? ஆட்சியை கவிழ்க்கின்ற செயலா? நாடாளுமன்றத்தில் வெற்றியையைப் பெற துணைச் பொதுச்செயலாளர் என்கிற முறையில் பணியாற்றி வருகிறேன். நாம் இழந்த சின்னத்தை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். 

எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவிற்கு காவல்துறையிலே அனுமதி கேட்டு கிடைக்காத நிலையில் நீதிமன்றத்தை நாடி அனுமதி பெற்றிருக்கிறோம். இதற்கு யார் காரணம்? சென்னையிலே உட்கார்ந்து, தலைமைச் செயலகத்தில் இருந்து கொண்டு 30 பேர் சேர்ந்து இயக்கத்தை நடத்தி விடலாம் என்று கனவு காண்கிறார்கள். இது பூனை கண்ணை மூடிக்கொண்டு இந்த உலகமே இருட்டாக இருக்கிறது என்பதற்கு சமம்' எந்த தெரிவித்தார். 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com