Published : 27,Sep 2021 07:59 PM

தமிழகத்தில் 1,657 பேருக்கு கொரோனா பாதிப்பு

coronavirus-infection-has-been-confirmed-in-1657-new-cases-in-Tamil-Nadu
தமிழ்நாட்டில் புதிதாக 1,657 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, மாநிலம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 1,657 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கோவை மாவட்டத்தில் 189, சென்னையில் 186 பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
 
image
மாநிலத்தில் இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 26 லட்சத்து 58 ஆயிரத்து 923 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து இன்று குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,662 ஆகும். தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்புடன் தற்போது 17,261 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்