[X] Close

கோவை : அணைப்பகுதிக்கு குளிக்கச் சென்று நீரில் மூழ்கிய 3 கல்லூரி மாணவர்கள்

வீடியோ ஸ்டோரி

கோவை அருகே அணைப்பகுதிக்கு குளிக்க சென்று, கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் நீரில் முழ்கியுள்ளனர்.


Advertisement

கோவை ஹிந்துஸ்தான் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் சிலர் இன்று கோவையை அடுத்த வாளையார் அணைப் பகுதிக்கு குளிக்க சென்றுள்ளனர். அணைப்பகுதியில் குளித்துக்கொண்டிருந்தபோது, நீரில் முழ்கியுள்ளார்கள் அவர்கள். இதனையடுத்து அவர்களுடன் வந்த மாணவர்கள் இது குறித்து கேரளா தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கேரள மாணவர்கள் நீரில் மூழ்கிய 3 கல்லூரி மாணவர்களின் உடலையும் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி: புதுக்கோட்டை: குளிக்கச் சென்ற சிறுவன் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சோகம்


Advertisement

image

அணை சுழற்சியில் சிக்கிய மூழ்கியது கோவை ஹிந்துஸ்தான் கல்லூரியில் படித்து வந்த சஞ்சீவ், ராகுல் மற்றும் பூர்னேஷ் ஆகிய 3 பேர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. நீரில் முழ்கியவர்களின் உடல்களை மீட்கும் பணியினை கேரள மாநில தீயணைப்பு மற்றும் மீட்புபணித்துறையினர் தேடி வருகின்றனர். மேலும் வாளையார் போலிசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்விவகாரம் குறித்து தமிழ்நாடு போலிசாரும் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement

Advertisement
[X] Close