அகதிகளுக்குத் தடை விதித்த ட்ரம்ப்புக்கு வலுக்கிறது எதிர்ப்பு

அகதிகளுக்குத் தடை விதித்த ட்ரம்ப்புக்கு வலுக்கிறது எதிர்ப்பு
அகதிகளுக்குத் தடை விதித்த ட்ரம்ப்புக்கு வலுக்கிறது எதிர்ப்பு

அமெரிக்காவில் அகதிகளுக்கு தடை விதித்து அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பிறப்பித்த உத்தரவுக்கு நாடு முழுவதிலும் எதிர்ப்பு வலுத்து வருகிறது.

அகதிகள் அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதித்து ட்ரம்ப் பிறப்பித்த உத்தரவை கண்டித்து பல்வேறு நகரங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றன. வாஷிங்டன், நியூயார்க், பென்சில்வேனியா, கலிபோர்னியா என பல்வேறு மாகாணங்களிலும் ஆயிரக்கணக்கானவர்கள் அதிபருக்கு எதிராக பேரணி மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டனர். குறிப்பாக அமெரிக்காவின் பிரதான விமான நிலையங்களிலும் ட்ரம்பின் கொள்கைகளை கண்டித்து போராட்டங்கள் நடைபெற்றன. ட்ரம்பின் இந்த அதிரடி‌ உத்‌தரவால் பல அகதிகள் விமான நிலையங்களிலேயே தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com