Published : 27,Sep 2021 02:07 PM
விக்னேஷ் சிவனுடன் திருப்பதி கோவிலில் வழிபாடு செய்த நடிகை நயன்தாரா

நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவனுடன் திருப்பதி கோயிலுக்குச் சென்று வழிபட்டுள்ளார்.
நயன்தாரா-விக்னேஷ் சிவன் தயாரிப்பில் விரைவில் ‘கூழாங்கல்’, ‘ராக்கி’ உள்ளிட்டப் படங்களும் விக்னேஷ் சிவன் இயக்கி தயாரிக்கும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படமும் விரைவில் வெளியாகவிருக்கின்றன.
வரும் தீபாவளிக்கு ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கும் ‘அண்ணாத்த’ படம் வெளியாகிறது. இந்த நிலையில், நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் சென்று வழிபட்டுள்ளனர்.
இந்த வீடியோவும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.