[X] Close

அரியலூர்: அடுத்தடுத்து 2 சிறுமிகளை காதல் திருமணம் செய்ததாக இளைஞர் மீது 2 வது போக்சோ

குற்றம்

Ariyalur-2nd-pokso-on-youth-for-allegedly-marrying-2-girls-in-a-row

அரியலூரில் சிறுமிகளை திருமணம் செய்ததாக இளைஞர் இரண்டாவது முறையாக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.


Advertisement

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார் (25). இவர் ஓட்டுனராக வேலை பார்த்து வரும் இவர், கடந்த ஜனவரி மாதம் பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து செந்துறை பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்த சிறுமியை, காதல் வலையில் வீழ்த்தி திருமணம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில், பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

image


Advertisement

இந்தநிலையில் கடந்த மாதம் ஊருக்கு வந்த அவர், மற்றொரு சிறுமியை காதலித்து திருமணம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், செந்துறை போலீசாரிடம் கொடுத்த புகாரின் பேரில் அஜீத் குமாரை கைது செய்த போலீசார் அவருடன் இருந்த சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து வழக்குப் பதிவு செய்து அஜீத் குமாரை செந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Advertisement

Advertisement
[X] Close