Published : 26,Sep 2021 12:28 PM

அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு விபத்து - 3 பேர் உயிரிழப்பு

3-Dead-Many-Injured-As-Train-Derails-In-US
அமெரிக்காவில் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர்.
 
அமெரிக்காவில் மொன்டானா மாகாணத்தில் நேற்று, பயணிகள் ரயில் ஒன்றில், 147 பயணிகளும் ரயில் பணியாளர்கள் 13 பேரும் பயணம் செய்துள்ளனர். வடக்கு மொன்டானாவில் ஜோப்ளின் அருகே மாலை 4 மணி அளவில் 5 ரயில் பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாகவும், இடிபாடுகளில் சிக்கிய பலர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் ரயிலை இயக்கிய ஆம்ட்ராக் தெரிவித்துள்ளார்.
 
image
விபத்துக்கான காரணம் குறித்த தகவல் இன்னும் தெரியாத நிலையில், பல பயணிகள் காயங்களுடன் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் வெளியான விடியோக்களில், ரயில் தண்டவாளம் அருகே மக்கள் காத்துக்கொண்டிருப்பது போலவும் அவர்களுக்கு அருகே லக்கேஜ்கள் சிதறிக் கிடப்பது போன்றும் பதிவாகியுள்ளது.
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்