பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு தருவதை பாகிஸ்தான் அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் வலியுறுத்தியுள்ளார்.
வாஷிங்டனில் பிரதமர் மோடியை துணை அதிபர் கமலா ஹாரிஸ் சந்தித்து பேசினார். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்த இச்சந்திப்பில் பேசப்பட்டவை குறித்து வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷவர்தன் ஷ்ரிங்லா செய்தியாளர்களிடம் விளக்கினார். மோடியுடனான சந்திப்பின் போது பாகிஸ்தான் விவகாரத்தை கமலா ஹாரிஸ் தாமாக முன்வந்து எழுப்பியதாக வெளியுறவுத்துறை செயலாளர் கூறியுள்ளார்.
இந்தியாவும் அமெரிக்காவும் பாதிக்கப்படுவதை தடுக்க பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு தருவதை பாகிஸ்தான் நிறுத்திக்கொள்ள வேண்டும் என கமலா ஹாரிஸ் கூறியதாகவும் ஹர்ஷவர்தன் ஷ்ரிங்லா தெரிவித்தார். ஆப்கானிஸ்தான் தலிபான்கள் கட்டுப்பாட்டில் வந்துள்ள நிலையில், ஹக்கானி நெட்வொர்க் போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் ஊக்கம் அளிப்பதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் அமெரிக்க துணை அதிபர் தாமாக முன்வந்து பாகிஸ்தானுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
Loading More post
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
தகுந்த காரணமின்றி ரயிலில் அலாரம் செயினை இழுக்கக்கூடாது - ரயில்வே போலீசார்
கூட்டுறவு பசுமை பண்ணை கடைகள் மூலம் குறைந்த விலையில் தக்காளி: அமைச்சர் ஐ.பெரியசாமி
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!