[X] Close

மதுரை: 2 மாதங்களில் 43 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்

தமிழ்நாடு

43child-marriages-has-been-stopped-since-last-2-months-in-madurai

மதுரை மாவட்டத்தில், கடந்த 2 மாதங்களில் மட்டும் 43 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Advertisement

குழந்தை திருமணங்களை தடுக்க, மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 2019ஆம் ஆண்டில் 84 திருமணங்களும், 2020ஆம் ஆண்டில் 60 திருமணங்களும், இந்த ஆண்டு இதுவரை 90 திருமணங்களும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் குழந்தை திருமணங்கள் நடைபெறுவதாக 273 புகார்கள் வந்துள்ள நிலையில், 234 திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில் மீண்டும் தலை தூக்கும் குழந்தை திருமணம்” : தேனியில் மட்டும் 49  திருமணங்கள் தடுத்து நிறுத்தம்!


Advertisement

39 திருமணங்கள் நடைபெற்றதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட குழந்தை திருமண தடுப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான புகார்களை அளிக்க, பொதுமக்கள் 1098 என்ற எண்ணை அழைக்கலாம் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.


Advertisement

Advertisement
[X] Close