Published : 24,Sep 2021 09:26 AM

கர்நாடகாவிலிருந்து  ஓசூருக்கு கடத்தி வரப்பட்ட 540 மதுபாட்டில்கள்: இருவர் கைது

Police-have-arrested-two-persons-for-smuggling-liquor-from-Karnataka-to-Hosur
கர்நாடகாவிலிருந்து ஓசூருக்கு மதுபானங்களைக் கடத்தி வந்ததாக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
 
கிருஷ்ணகிரி மாவட்டம் ஜூஜூவாடி சோதனைச் சாவடியில் வாகனத்தணிக்கை செய்த மதுவிலக்கு காவல்துறையினர், கர்நாடகாவிலிருந்து கோழித்தீவனம் ஏற்றி வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் ஓட்டுநரின் இருக்கையின் பின்புறம், 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 540 மதுபாட்டில்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். லாரியைப் பறிமுதல் செய்த காவல்துறையினர், அதில் இருந்த திருப்பத்தூர் மாவட்டம் அட்டுகொட்டாய் தமிழ்வாணன், பெரியகுறுஞ்சி அண்ணாமலை ஆகியோரைக் கைது செய்தனர்.
 
 
 
 
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்