Published : 24,Sep 2021 07:54 AM

கொரோனா தடுப்பு பணியில் கப்பல் துறை பங்கு முக்கியமானது - தமிழிசை பேச்சு

Telangana-Governor-Tamilisai-Soundararajan-has-said-that-the-role-of-the-shipping-industry-was-important-in-bringing-in-vaccines-and-medicines-during-the-Corona-period-
கொரோனா காலத்தில் தடுப்பூசிகள் மற்றும் மருந்துகள் கொண்டு வந்ததில், கப்பல் துறையின் பங்கு முக்கியமானது என தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
 
தேசிய கப்பல் சிப்பந்திகள் நல வாரியத்தின் சார்பில் உலக கடல்சார் நிகழ்ச்சி சென்னை துறைமுக வளாகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை, தாம் மருத்துவரானதில் கப்பல் சிப்பந்திகளின் பங்கு உள்ளது என்று கூறினார். கொரோனா ஓயாத காரணத்தால் தடுப்பூசி மற்றும் முகக்கவசம் கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்