Published : 14,Aug 2017 04:26 AM

எடப்பாடியின் கேலிப்படம் வாட்ஸ்அப்பில் வெளியீடு: போலீசார் விசாரணை

Morph-photo-of-Edappadi-Palanisamy--Police-filed-complained

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் படத்தை கேலியாக சித்தரித்து வாட்ஸ்அப்பில் வெளியிட்டது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் மாவட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் படத்தை கேலியாக சித்தரித்து வாட்ஸ்அப்பில் மர்ம ஆசாமிகள் வெளியிட்டுள்ளனர். இதுதொடர்பாக சேலம் மாவட்டம் வீரபாண்டி ஒன்றிய அதிமுக செயலாளர் வரதராஜ் புகார் அளித்துள்ளார்.

அதில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் படம் கேலியாக சித்தரிக்கப்பட்டு வாட்ஸ்அப்பில் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, முதலமைச்சரின் முகத்தை மட்டும் ஒரு பெண்ணின் புகைப்படத்திற்குள் கேலியாக சித்தரித்து, அதற்கு பின்னால் மதுப்பாட்டில் அடுக்கி வைத்திருப்பது போன்றும், சாராயம் வைத்து கொள்ள அனுமதித்த பழனியம்மாள் என்ற வாசகமும் எழுதப்பட்டிருந்தது. முதலமைச்சரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும், அதிமுக தொண்டர்கள் மனதை புண்படுத்தும் நோக்கத்திலும் வாட்ஸ்அப்பில் பரப்பிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறப்பட்டிருந்தது.

முதலமைச்சரின் படத்தை கேலியாக சித்தரித்து வாட்ஸ்அப்பில் வெளியிட்ட மர்ம ஆசாமிகள் யார்? என்பது குறித்து சைபர் கிரைம் போலீசார் மூலம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் இந்தப் படத்தை வெளியிட்ட மர்ம ஆசாமிகளை கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்