Published : 14,Aug 2017 02:56 AM
70 குழந்தைகள் உயிரிழப்பு: உ.பி. அமைச்சர் வீட்டின் மீது முட்டை வீச்சு

ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாமல் குழந்தைகள் உயிரிழந்ததைக் கண்டித்து உத்தரப் பிரதேச சுகாதாரத்துறை அமைச்சர் வீட்டின் மீது சமாஜ்வாதி கட்சித் தொண்டர்கள் முட்டை மற்றும் தக்காளியை வீசி எதிர்ப்பு தெரிவித்தனர்.
அலகாபாத் நகரில் உள்ள சுகாதாரத்துறை அமைச்சர் சித்தார்த்நாத் சிங் வீட்டின் முன் நூற்றுக்கணக்கானோர் திரண்டு, அவர் பதவி விலகக் கோரி முழக்கமிட்டனர். முட்டைகள், தக்காளிகளை வீட்டை நோக்கி வீசினர்.