[X] Close

ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி பயணம்

தமிழ்நாடு

Governor-of-Tamil-Nadu-RN-Ravi-is-leaving-for-Delhi-today
தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி செல்கிறார். குடியரசுத்தலைவர், குடியரசு துணைத் தலைவர் மற்றும் அமித்ஷா ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்திக்கிறார்.
 
தமிழகத்தின் 26-வது ஆளுநராக கடந்த சனிக்கிழமையன்று ஆர்என் ரவி பதவியேற்றார். புதிய ஆளுநரை டிஜிபி சைலேந்திரபாபு நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினார். புதுச்சேரியின் துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், ஆர்.என்.ரவியை நேற்று நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது ஆர்.என்.ரவிக்கு தமிழர் பாரம்பரிய உடையான கதர் வேட்டி - சட்டையைப் பரிசளித்து வாழ்த்தினார்.
 
image
இந்நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி செல்கிறார். ஆளுநராக பதவியேற்ற பின் முதல் முறையாக டெல்லி செல்லும் ஆளுநர், குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்திக்கிறார். இதனிடையே, நாகா கிளர்ச்சியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் தலைமை மத்தியஸ்தர் பொறுப்பு வகித்து வந்த ஆர்.என்.ரவி, அந்தப் பதவியை ராஜினாமா செய்தார். தற்போது தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதால் அந்தப் பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
 

Advertisement

Advertisement
[X] Close