[X] Close

பேட்டிங்கில் தடுமாறிய ஹைதராபாத் அணி - 134 ரன்களில் சுருட்டியது டெல்லி கேபிடல்ஸ்!

விளையாட்டு

SRH-scored-134-runs-batting-first-against-DC-in-match-number-33-of-the-IPL-2021

துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் 2021 தொடரின் 33வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதல் பேட் செய்தது. 


Advertisement

image

அந்த அணிக்காக வார்னர் மற்றும் சாஹா தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை வீசிய நார்க்யா, வார்னரை ஆட்டத்தின் மூன்றாவது பந்தில் வெளியேற்றினார். 


Advertisement

தொடர்ந்து கேப்டன் வில்லியம்சன் களத்திற்கு வந்தார். சாஹாவுடன் சேர்ந்து இன்னிங்ஸை நிதானமாக அணுகினார். இருந்தும் சாஹா 17 பந்துகளில் வெறும் 18 ரன்களை எடுத்து அவுட்டானார். பத்தாவது ஓவரில் வில்லியம்சன்னும் 18 ரன்களில் வெளியேறினார். அடுத்த இரண்டே பந்துகளில் மனிஷ் பாண்டேவும் 17 ரன்கள் எடுத்து வெளியேறினார். 

image

தொடர்ந்து ஜாதவ்(3), ஹோல்டர்(10), சமாத், ரஷீத் கான்(22), சந்தீப் ஷர்மா(0) என விக்கெட்டுகளை ஹைதராபாத் அணி இழந்துக் கொண்டே இருந்தது. இதில் ரஷீத் மற்றும் சந்தீப் ரன் அவுட்டாகி இருந்தனர். 20 ஓவர்கள் முடிவில் 134 ரன்களை எடுத்தது அந்த அணி. சமாத் 28 ரன்களை குவித்திருந்தார். 


Advertisement

டெல்லி அணிக்காக ராபாடா (3), அக்சர் பட்டேல் (2), நார்க்யா (2) விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தனர். தற்போது 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை டெல்லி அணி விரட்டி வருகிறது. 

இதையும் படிக்கலாம் : நடராஜானுக்கு கொரோனா.. குவாரன்டைனில் வீரர்கள்: நடப்பு ஐபிஎல் சீசனில் அடுத்து என்ன நடக்கும்? 


Advertisement

Advertisement
[X] Close