[X] Close

நடராஜானுக்கு கொரோனா.. குவாரன்டைனில் வீரர்கள்: நடப்பு ஐபிஎல் சீசனில் அடுத்து என்ன நடக்கும்?

சிறப்புக் களம்

RT-PCR-Test-shows-COVID19-positive-for-Sunrisers-Hyderabad-player-T-Natarajan-and-What-will-happen-next-in-the-second-phase-of-the-current-IPL-season

கொரோனா தொற்று பரவல் அச்சத்தால் கடந்த மே மாத தொடக்கத்தில் ஒத்திவைக்கப்பட்ட நடப்பு ஐபிஎல் சீசனின் இரண்டாவது பாதி ஆட்டங்கள் கடந்த ஞாயிறு அன்று தான் ஆரம்பமானது. இந்த நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் நடராஜானுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவருடன் தொடர்பில் இருந்த ஆறு பேர் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர். இத்தகைய சூழலில் நடப்பு ஐபிஎல் சீசன் திட்டமிட்டபடி நடைபெறுமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. 


Advertisement

image

ஐபிஎல் நிர்வாகம் கொடுத்துள்ள விளக்கம் என்ன?


Advertisement

“ஹைதராபாத் அணி வீரர் நடராஜானுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அவர் சக அணியினரிடம் இருந்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அவருக்கு இப்போது அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை. இருந்தாலும் அவருடன் தொடர்பில் இருந்து விஜய் ஷங்கர் (வீரர்), விஜய்குமார் (அணியின் மேலாளர்), ஷியாம் சுந்தர் (பிஸியோதெரபிஸ்ட்), அஞ்சனா வண்ணன் (மருத்துவர்), துஷார் (லாஜிஸ்டிக் மேலாளர்) மற்றும் பெரியசாமி கணேசன் (நெட் பவுலர்) என ஆறு பேர் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர். 

அனைவருக்கும் RT-PCR சோதனை மேற்கொண்டதில் அதன் முடிவு யாருக்கும் தொற்று பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது. அதன் முடிவாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் திட்டமிட்டபடி நடைபெறும்” என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

image


Advertisement

இங்கிலாந்து - இந்தியா தொடரில் நடந்தது என்ன?

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி இருந்தது. நான்காவது டெஸ்டின் போது தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கொரோனா தொற்று உறுதியானது. தொடர்ந்து இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர், ஃபீல்டிங் பயிற்சியாளர், பிஸியோ என மூவரும் அடுத்தடுத்து தொற்று பாதிப்பு உறுதியானது. இது நான்காவது டெஸ்ட் போட்டிக்கு பிறகு நடந்தது. இந்த நிலையில் தான் செப்டம்பர் 10 முதல் 14ஆம் தேதி வரை இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் உள்ள ஓல்டு டிராவோர்ட் மைதானத்தில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்த ஐந்தாவது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டது. 

“கொரோனா பரவல் மற்றும் அதிகரித்து வரும் தொற்று அச்சத்தால் இந்திய அணி களம் இறங்க முடியாத சூழலுக்கு ஆளாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியத்துடன் பேசிய பிறகே போட்டியை ரத்து செய்யும் முடிவுக்கு வந்துள்ளோம்” என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அப்போது தெரிவித்திருந்தது.

இங்கு கவனிக்க வேண்டியது என்னவென்றால் அணியின் பயிற்சியாளர்களுக்கு தொற்று உறுதியான போதும் போட்டி நடந்தது. இறுதியில் வீரர்கள் தரப்பில் கொரோனா பரவி விடுமோ என்ற அச்சம் எழுந்ததால் தான் தொடர் ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. 

image

இங்கிலாந்து VS பாகிஸ்தான் தொடரில் நடந்தது என்ன?

கடந்த ஜூலையில் பாகிஸ்தான் அணி, இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடி இருந்தது. தொடர் ஆரம்பமாவதற்கு முன்னதாக இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் இடம் பெற்றிருந்த மூன்று கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அணியுடன் பயணிக்கும் நான்கு பின்கள ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதனால் பாகிஸ்தான் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் விளையாட இருந்த வீரர்கள் அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தியது அந்த அணியின் கிரிக்கெட் வாரியம். 

அதோடு பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் இங்கிலாந்து அணியை பென் ஸ்டோக்ஸ் வழிநடத்துவார் எனவும், முற்றிலும் மாறுபட்ட வீரர்கள் அடங்கிய புதிய அணியாக இந்த தொடரில் இங்கிலாந்து களம் இறங்கும் எனவும் வாரியம் சொல்லி இருந்தது. அதே போலவே மூன்று ஒருநாள் போட்டியை ஸ்டோக்ஸ் வழிநடத்தி இருந்தார். அந்த தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணிக்காக ஐந்து வீரர்கள் அறிமுக வீரர்களாக களம் கண்டனர்.  

image

ஐபிஎல் 2021 : கொரோனா பரவலால் இந்தியாவில் ரத்து செய்யப்பட்ட ஆட்டங்கள்!

நடப்பு ஐபிஎல் சீசனின் முற்பாதி ஆட்டங்கள் இந்தியாவில் நடைபெற்றது. அப்போது கொல்கத்தா அணி வீரர்கள் மற்றும் சென்னை அணியின் நிர்வாகி மற்றும் பயிற்சியாளர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. அதன் எதிரொலியாக தொடரை ஐபிஎல் நிர்வாகம் ஒத்திவைத்தது. தற்போது நடப்பு சீசனில் எஞ்சியுள்ள ஆட்டங்களை அமீரகத்தில் நடத்தி வருகிறது. 

பயோ பபூளில் ஏற்படும் சிக்கல், ரசிகர்களை அனுமதிப்பது மாதிரியானவற்றில் ஐபிஎல் நிர்வாகம் கூடுதல் கவனம் வைத்துக் கொண்டால் நடப்பு சீசனை ஐபிஎல் நிர்வாகம் திட்டமிட்டபடி நடத்தும். இல்லையெனில், சிக்கல் எழலாம் என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன. கடந்த முறை பயோ பபூளில் திட்டமிட்டபடி சீசனை வெற்றிகரமக நடத்தி முடித்திருந்தது ஐபிஎல் நிர்வாகம். அதை மீண்டும் ஒருமுறை செய்தாக வேண்டிய நிர்பந்தம் தற்போது எழுந்துள்ளது. 

இதையும் படிக்கலாம் : தனிமையில் உள்ள மூத்த குடிமக்களுக்கு உதவ ரோபோ: ஹைதராபாத் ஐடி நிறுவனம் வடிவமைப்பு 


Advertisement

Advertisement
[X] Close