Published : 13,Aug 2017 03:57 PM

ஆசிய ஷாட்-கன் துப்பாக்கிச் சுடுதல்: இந்திய அணி தங்கம்

Asian-Shotgun-Cship--Mairaj--Rashmmi-win-mixed-skeet-gold

கஜகஸ்தானில் நடைபெற்ற ஆசிய ஷாட் கன் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில், ஸ்கீட் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய அணி தங்கப்பதக்கம் வென்றது.

மைராஜ் அஹமது கான், ரஷ்மி ரத்தோர் ஆகியோர் கொண்ட இந்திய அணி இறுதிப்போட்டியில் சீனாவின் லியு ஜியாங்ச்சி, காவோ ஜியான்மெய் இணையை எதிர்த்து விளையாடியது. இதில் 28-27 என ஒரு புள்ளி வித்தியாசத்தில் இந்திய இணை வெற்றி பெற்றது. மூன்று தங்கம் உட்பட 8 பதக்கங்களுடன் இந்திய அணி ‌இந்த தொடரை நிறைவு செய்துள்ளது.
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்