Published : 13,Aug 2017 03:39 PM
வட மாநிலங்களில் கனமழை - ரயில்கள் ரத்து

வட மாநிலங்களில் கனமழை பெய்து வருவதையொட்டி 20 ரயில்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன.
பீகார், அசாம், மே.வங்கம் உட்பட பல்வேறு வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. தொடர் மழையால் லட்சக்கணக்கானோர் வீடுகள் இழந்து பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 20 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.