[X] Close

உலகளவில் எரிசக்திஆற்றல் உற்பத்தியில் 2030ல் இந்தியா மிகப்பெரிய நாடாக திகழும்: கவுதம் அதானி

வணிகம்

We-plan-to-invest-20-billion-US-Dollars-in-renewable-energy-in-the-next-ten-years-says-Gautam-Adani-the-chairman-of-Adani-Group-of-Companies

அதானி குழும தலைவர் கவுதம் அதானி, இந்திய முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்றிருந்தார். இந்த நிகழ்வில் வரும் 2030 வாக்கில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆற்றலை உற்பத்தி செய்யும் உலகின் மிகப்பெரிய நிறுவனமாக அதானி குழுமம் திகழும் என பேசியுள்ளார். 


Advertisement

image

“இன்றைய தேதிக்கு உலகளவில் சூரிய சக்தி மூலம் பவர் ஜெனரேட் செய்யும் இடத்தில் முதல் நிலையில் நாம் உள்ளோம். தற்போது பயன்பாட்டில் உள்ள, கட்டமைக்கப்பட்டு வருகிற மற்றும் எதிர்கால ஒப்பந்தங்களின் கணக்கின் அடிப்படையில் இதை சொல்கிறேன். முதல் இலக்கான 25 ஜிகாவாட்டை நாம் அடைந்துள்ளோம். இதன் மூலம் வரும் 2030-இல் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆற்றலை உற்பத்தி செய்யும் உலகின் மிகப்பெரிய நிறுவனமாக அதானி குழுமம் திகழும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது. 


Advertisement

அடுத்த நான்கு ஆண்டுகளில் பவர் ஜெனரேட் செய்யும் வேகத்தை மும்மடங்கு கூட்ட உள்ளோம். மேலும் அடுத்த பத்து ஆண்டுகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் 20 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய உள்ளோம்” என அவர் தெரிவித்துள்ளார். 

இதையும் படிக்கலாம் : ‘கேப்டன்சி பதவி’ கோலி தானாக முடிவு எடுக்கிறாரா.. சூழலின் அழுத்தம் காரணமா?- என்ன நடக்கிறது? 


Advertisement

Advertisement
[X] Close