Published : 13,Aug 2017 02:20 PM

19-ஆம் நூற்றாண்டு படத்தின் ஹீரோ நிவின் பாலி: ஜோடி போடும் அமலா பால்

Nivin-Pauly-Joins-hands-with-Amala-Paul

நிவின் பாலி, அமலா பால் புதிதாக ஜோடி சேர்ந்துள்ள படத்தின் கதைக்களம், 19-ஆம் நூற்றாண்டை சேர்ந்த திருடர் ஒருவர் சம்பந்தப்பட்டது என தெரியவந்துள்ளது.

தனது வசீகர தாடியால் யுவதிகளின் மனதை கட்டிப்போட்ட நிவின் பாலியும், நடிகை அமலா பாலும் ஒன்று சேரும் படம் "காயம்குளம் கொச்சுண்ணி". ரோஷன் ஆண்ட்ரூஸ் இப்படத்தை இயக்குகிறார்.

வழக்கமான கதை போன்று இல்லாமல் மாறுபட்ட கதையம்சம் கொண்டது இத்திரைப்படம் என தயாரிப்பாளர் தரப்பில் கூறப்படுகிறது. கதைப்படி, நிவின் பாலி திருடன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதுவும் இக்கால திருடர் இல்லை. 19-ஆம் நூற்றாண்டு கால திருடன். நிவின்பாலி, செல்வந்தர்களிடம் இருந்து நகை, பணம் முதலியவற்றை திருடி எளிய மக்களுக்கு கொடுப்பார் எனவும் சொல்லப்படுகிறது.

படத்திற்கான, நிவின் பாலி, மற்றும் அமலா பால் கெட்டப் தற்போது வெளியாகியுள்ளது. இதில் இருவரும் முற்றிலும் மாறுபட்ட பழங்கால மனிதர்களின் காணப்படுகின்றனர். அமலா பால் மற்றும் நிவன் பாலி ஒன்றாக இணைவது இது இரண்டாவது முறையாகும். ஏற்கனவே 2015-ஆம் ஆண்டு வெளியான மிலி படத்திலும் இருவரும் இணைந்து நடித்திருந்தனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்