[X] Close

கனடாவில் மீண்டும் ஆட்சி அமைக்கிறாரா ஜஸ்டின் ட்ரூடோ? என்ன சொல்கிறது ஊடக கணிப்பு?

உலகம்

Justin-Trudeau-Wins-3rd-Term-Fails-To-Get-Majority

கனடா நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், மீண்டும் ஜஸ்டின் ட்ரூடோவே ஆட்சி அமைப்பார் என அந்நாட்டு ஊடகங்கள் கணித்துள்ளன.


Advertisement

கனடாவில் ஆட்சி காலம் நிறைவடைய இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆட்சியை கலைத்தார். இதனை அடுத்து நேற்றைய தினம் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. கொரோனா பரவல் காரணமாக மக்கள் தபால் வாக்களிக்கும் வாய்ப்பும் இம்முறை வழங்கப்பட்டது. ட்ரூடோ அரசு மீது மக்கள் அதிருப்தியில் இருப்பதால் அவர் தோல்வி அடைய கூடும் என கருத்துகணிப்புகள் தெரிவித்தன.

Justin Trudeau faces protest at B.C. campaign stop – Williams Lake Tribune


Advertisement

ஆனால், தற்போது வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், ஜஸ்டின் ட்ரூடோவே மீண்டும் ஆட்சி அமைப்பார் என அந்நாட்டு ஊடகங்கள் கணித்துள்ளன. கடந்த 2019ஆம் ஆண்டை போல மைனாரிட்டி அரசாக அமையக் கூடும் என்றும் கூறியுள்ளன. முழுமையான தேர்தல் முடிவுகள் இன்று இரவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement
[X] Close