[X] Close

‘இந்த ஸ்பார்க் போதுமா..!’ - விமர்சனங்களை தவிடுபொடியாக்கிய ருதுராஜ் கெய்க்வாட்.. யார் இவர்?

சிறப்புக் களம்

IPL-2021-CSK-Batsman-Ruturaj-Gaikwad-puts-an-end-card-with-his-form-to-the-criticism-that-the-Young-players-has-No-Spark-in-their-Game

‘கூல் கேப்டன்’ என அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, கடந்த ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உடனான தோல்விக்கு பிறகு மிகவும் காட்டமான விமர்சனத்தை இளம் வீரர்கள் மீது வைத்திருந்தார். 


Advertisement

image

ஆங்கிரி பேர்ட்டான தோனி!


Advertisement

கடந்த சீசனில் அணியில் உள்ள இளம் வீரர்களுக்கு ஏன் வாய்ப்பு அதிகளவில் வழங்கப்படவில்லை என்ற விமர்சனங்களும் எழுந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

“அணியில் இருக்கும் இளம் வீரர்களுக்கு போதிய அளவு உத்வேகம் இல்லை. அதனால்தான் அவர்களை களமிறக்கவில்லை” என அப்போது சொல்லி இருந்தார் தோனி.  

அதன்பிறகு அந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய எஞ்சியிருந்த ஆட்டங்களில் இளம் வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் நாராயண் ஜெகதீசன் மாதிரியான வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்தது. கடந்த சீசனில் அதற்கு முன்னதாகவும் இரண்டு போட்டிகளில் விளையாடி இருந்தார் ருதுராஜ். ஆனால் அந்த இரண்டிலும் அவர் தொடக்க வீரராக களம் இறங்கவில்லை. பெரிய அளவில் ரன் எதுவும் எடுக்கவில்லை.  


Advertisement

image

தோனியின் அந்த விமர்சனத்திற்கு பிறகான போட்டியிலும் மும்பை அணிக்கு எதிராக ருதுராஜ் ரன் சேர்க்க தடுமாறினார். ஆனால் தோனியின் வார்த்தைகள் வெறும் ஆறு நாட்கள் தான் பலித்திருந்தன. 

இந்த ஸ்பார்க் போதுமா வாத்தியாரே? 

கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி மூன்று லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்றிருந்தது. அந்த மூன்று ஆட்டங்களிலும் ருதுராஜ் தொடக்க வீரராக களம் இறங்கி அரைசதம் பதிவு செய்திருந்தார். மூன்றிலும் சென்னை அணியின் டாப் ஸ்கோரரும் அவர் தான். அவரது ஆட்டம் தோனி சொன்ன விமர்சனங்களுக்கு பதில் கொடுக்கும் விதமாக அமைந்தது. அதன் பிறகு சென்னை அணியின் ஆஸ்தான தொடக்க வீரராக விளையாட தொடங்கினார்.  

image

நடப்பு ஐபிஎல் சீசனின் முற்பாதி ஆட்டங்களிலும் ருதுராஜ் தனது பொறுப்பை உணர்ந்து அவர் விளையாடி இருந்தார். மொத்தம் 7 போட்டிகளில் இரண்டு அரைசதங்களை பதிவு செய்திருந்தார். இப்போது அந்த கணக்கு மூன்று அரைசதங்களாக உயர்ந்துள்ளது.  

ருதுராஜ் கெய்க்வாட்!

24 வயதான ருதுராஜ் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர். புனேவில் பிறந்து வளர்ந்த அவருக்கு பால்யம் முதலே கிரிக்கெட் விளையாட்டின் மீது தீராத ஆர்வம். டெக்னிக்குகளை கச்சிதமாக பின்பற்றி பெரிய ரிஸ்க் ஏதும் எடுக்காமல் நிலையாக களத்தில் நின்று விளையாடும் சுபாவத்தை கொண்டவர். அதே நேரத்தில் அவரது ஸ்ட்ரைக் ரேட்டையும் கவனத்தில் வைத்துக் கொள்ளும் வீரர். இதை தான் சர்வதேச கிரிக்கெட்டில் ரன் மழை பொழிந்த மற்றும் பொழிந்து வரும் ஜாம்பவான்கள் செய்வார்கள். இந்திய கேப்டன் கோலியும் அப்படிப்பட்ட வீரர் தான். 

image

2016 - 17 விஜய் ஹசாரே தொடர் தான் ருதுராஜின் திறனை அடையாளம் காட்டியது. அந்த முறை தன் மாநில அணிக்காக 7 இன்னிங்ஸ் விளையாடி 444 ரன்களை அவர் குவித்திருந்தார். அதில் 1 சதம் மற்றும் 3 அரைசதங்களும் அடங்கும். தொடர்ந்து 2018-இல் இந்திய-B அணியில் இடம் பெற்றார். 

தொடர்ந்து 2019 ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட ஏலத்தில் எடுக்கப்பட்டார். இந்திய-A அணிக்காகவும் அவர் விளையாடி உள்ளார். 

சென்னை அணிக்காக 2020 மற்றும் 2021 (இதுவரை விளையாடியுள்ள போட்டிகள்) என இரண்டு ஐபிஎல் சீசன்களையும் சேர்த்து 14 இன்னிங்ஸ் விளையாடி உள்ளார். அதன் மூலம் 488 ரன்களை பதிவு செய்துள்ளார். இதில் ஆறு அரைசதங்கள் அடங்கும். தற்போது இந்திய அணிக்காகவும் டி20 கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். 

image

நட்சத்திர வீரர் அந்தஸ்து!

நெருக்கடியான நேரத்தில் தனது ஒட்டுமொத்த திறனையும் ஒரு விளையாட்டு வீரன் வெளிக்கொண்டு வந்து, தான் சார்ந்த அணிக்காக களத்தில் போராடுவான். வெற்றி, தோல்வி என்பதையெல்லாம் கடந்து அந்த போராட்டம் இருக்கும். அப்படியொரு போராட்ட குணத்தை ருதுராஜ், மும்பை அணிக்கு எதிராக வெளிப்படுத்தி இருந்தார். அந்த போராட்டம் சென்னை அணியை வெற்றி பெற செய்துள்ளது. தற்போது அவர் சென்னை அணியின் ஸ்டார் பேட்ஸ்மேனாகி உள்ளார். 

டூப்ளசிஸ், மொயின் அலி, ரெய்னா, தோனி, ராயுடு (காயம்பட்டதால் விலகல்) என அனுபவ வீரர்கள் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்ப ஆட்டம் முழுவதும் மும்பை அணியின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால் ருதுராஜ் ஆடிய ஆட்டம், ‘இந்த ஆட்டம் இன்னும் முடியவில்லை. களத்தில் நான் உள்ளேன்’ என சொல்வதை போல இருந்தது. அவருக்கு ஜடேஜா கொடுத்த கம்பெனியை குறிப்பிட்டு சொல்ல வேண்டும்.

ஆட்டம் கண்டு போன சென்னையின் அஸ்திவாரத்தை ஓட்டம் எடுத்து நிலைபெற செய்தார் ருதுராஜ். முதல் 15 ஓவர்கள் வரை அடக்கி வாசித்த அவர், அடுத்த ஐந்து ஓவர்களில் அடித்து ஆடினார். 

image

சென்னை அணி, மும்பை அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் மொத்தம் 7 சிக்ஸர்களை விளாசி இருந்தது. அதில் 4 சிக்ஸர்கள் ருதுராஜ் விளாசியது. அதில் மூன்று சிக்ஸர்கள் பும்ரா மற்றும் போல்ட் என உலக தரம் வாய்ந்த பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அவர் அடித்திருந்தார். பும்ரா யார்க்கரை மிஸ் செய்ய, ஸ்வீப் ஷாட் ஆடி பந்தை சிக்ஸருக்கு பறக்க விட்டது கிளாசிக் ஷோ. 

இது மாதிரியான ஷோவை ஐபிஎல் அரங்கில் சென்னை அணிக்காகவும், சர்வதேச கிரிக்கெட் களத்தில் இந்திய அணிக்காகவும் எதிர்வரும் நாட்களில் வெளிப்படுத்த உள்ளார் ருதுராஜ்.

இதையும் படிக்கலாம் : "சீனியருக்கு ரூ60,000"..டொமஸ்டிக் கிரிக்கெட் வீரர்களுக்கான ஊதியத்தை உயர்த்திய ஜெய் ஷா 


Advertisement

Advertisement
[X] Close