[X] Close

சண்டைக் காட்சிக்காக ‘பீஸ்ட்’ படக்குழு டெல்லி பயணம்

சினிமா

Vijay-Beast-shooting-started-in-Delhi-from-today

விஜய் நடிக்கும் ’பீஸ்ட்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் தொடங்கியுள்ளது.


Advertisement

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்டோர் 'பீஸ்ட்' படத்தில் இணைந்து நடித்து வருகிறார்கள். அனிருத் இசையமைகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு கடந்த இரண்டு மாதங்களாக சென்னையில் நடைபெற்று வருகிறது. மேலும், இம்மாத துவக்கத்தில் நான்காம் கட்டப் படப்பிடிப்பை சென்னை கோகுலம் ஸ்டூடியோவில் அமைக்கப்பட்ட அரங்கில் நடத்தினர் படக்குழுவினர்.

imageimage


Advertisement

இதை முடித்துக்கொண்டு தற்போது சண்டைக் காட்சிக்காக படக்குழுவினர் டெல்லி சென்றுள்ளனர். அங்கு இன்று முதல் 5 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறுகிறது. ஸ்டண்ட் மாஸ்டர் அன்பறிவ் இயக்கத்தில் தற்போது சண்டைக் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. ‘கேஜிஎஃப் 2’, ‘விக்ரம்’ உள்ளிட்டப் படங்களில் அன்பறிவ் மாஸ்டர்கள் சண்டைக் காட்சி அமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement
[X] Close