Published : 13,Aug 2017 12:00 PM

மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் பலி

Absence-of-doctors-kills-patients-in-hospital

ஆம்பூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால் சிறுமி உட்பட 2பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் டாக்டர் இல்லாததால், 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட வைஷ்ணவி என்ற சிறுமியும், கார் விபத்தில் படுகாயமடைந்த பச்சகுப்பத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவரும் பரிதாபமாக பலியாகினர். இந்த சம்பவத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து உறவினர்கள் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்