Published : 18,Sep 2021 07:32 PM

மகளுக்கு பாலியல் தொல்லை: மனைவி அளித்த புகாரின் பேரில் மருத்துவர் தந்தை மீது குண்டாஸ்

Daughter-sexually-harassed-Kundas-on-doctors-father-over-wifes-complaint

மகள் மீது பாலியல் அத்துமீறியதாக தாய் கொடுத்த புகாரின் பேரில் மருத்துவர் தந்தை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

திருச்சி கே.கே.நகர் பகுதியில் வெல் பேபி தடுப்பூசி மையம் என்ற பெயரில் குழந்தைகள் நல மருத்துவமனை நடத்தி வருபவர் டாக்டர் ரமேஷ். இவருக்கு 12 வயதில் மகள் உள்ளார். இந்நிலையில், ரமேஷின் மனைவி வீட்டில் இல்லாத நேரங்களில் அவரது 12 வயது மகளுக்கு மருத்துவர் ரமேஷ் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் தெரிவித்த நிலையில், திருச்சி கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

இதையடுத்து புகாரின் பேரில் தீவிர விசாரணை மேற்கொண்ட கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் காவல் துறையினர், டாக்டர் ரமேஷ் மீதான பாலியல் குற்றச்சாட்டை உறுதிப்படுத்தியதோடு அவரை கைது செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்