ஹரி - அருண் விஜய் இணைந்துள்ள ’யானை’ படத்தின் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை புதுச்சேரி அருண் விஜய் ரசிகர்கள் கடலுக்கடியில் வெளியிட்டுள்ளனர்.
இயக்குநர் ஹரியும் அருண் விஜய்யும் முதன்முறையாக ‘யானை’ படத்தில் இணைந்துள்ளனர். யோகி பாபு, சினேகன், ராதிகா,கங்கை அமரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அருண் விஜய்க்கு அண்ணனாக சமுத்திரகனி நடிக்கிறார். வில்லனாக ‘கேஜிஎஃப்’ புகழ் கருடா ராம் நடிக்கிறார். ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார்.
கொரோனா இரண்டாவது அலைக்கு முன்பு கடந்த மார்ச் மாதம் தொடங்கிய, இப்படத்தின் படப்பிடிப்பு ஊரடங்கால் தடைப்பட்டுப் போனது. தற்போது அரசு படப்பிடிப்பு நடத்த அனுமதி அளித்துள்ளதால் மீண்டும் கடந்த ஜூலை 28 ஆம் தேதிமுதல் ராமேஸ்வரம், தூத்துக்குடி, காரைக்குடி, பழனி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடைபெற்றது.
தற்போது, இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ’யானை’ அருண் விஜய்யின் 33 வது படம் என்பதால் 33 சினிமா பிரபலங்கள் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டனர்.
இந்த நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை புதுச்சேரி அருண் விஜய்யின் வெறித்தனமான ரசிகர்கள் வித்தியாசமாக படகில் சென்று நடக்கடலில் ஆக்சிஜனுடன் குதித்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இந்தப் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.
Loading More post
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடிகர் பூ “ராமு” காலமானார்!
மத்திய அரசின் திட்டம் என்ற பெயரில் பல கோடி ரூபாய் மோசடி - குற்றவாளி சிக்கியதன் பின்னணி!
வெளிநாட்டு கடன்களை செலுத்த இயலாமல் “திவால்” ஆகும் ரஷ்யா? காரணம் இதுதானா?
வரிகளை குறைக்க இப்படிலாமா செய்வாங்க? - பிரபல நிறுவனங்களின் தில்லாலங்கடி!
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி?.. சண்டீகரில் நாளை தொடங்குகிறது கூட்டம்!
25 ஆண்டுகால சூர்யவம்சம்.. நந்தினிக்கள் ஏன் கொண்டாட வேண்டிய தேவதைகள்? #25YearsOfSuryaVamsam
பணமா? பாசமா?.. வாழ்க்கை தத்துவமும் ரஜினி படங்களின் கேரக்டர்களும்! - ஓர் உளவியல் பார்வை
உத்தவ் தாக்கரேவுக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள் இதோ!
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai