தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்என் ரவி பதவியேற்றுள்ள நிலையில் அவரது பின்னணி குறித்து பார்ப்போம்.
பீகார் மாநிலம் பாட்னாவை பூர்விகமாக கொண்ட ஆர்என் ரவியின் முழுப் பெயர் ரவீந்திர நாராயண் ரவி ஆகும். பீகாரில் பிறந்திருந்தாலும் ஆர்என் ரவி 1976ஆம் ஆண்டு கேரள பிரிவு ஐபிஎஸ் அதிகாரி ஆவார். கேரளாவிலும் பிறகு பிற மாநிலங்களிலும் காவல் துறையில் உயர் பொறுப்புகளை வகித்த ஆர்என் ரவி, மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐயிலும் பணிபுரிந்துள்ளார்.
இது தவிர மத்திய அரசின் உளவுப்பிரிவான IB-யிலும் பணியாற்றிய ஆர்என் ரவி, காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் வன்முறையை முடிவுக்கு கொண்டு வரும் பணியில் ஈடுபட்ட அனுபவம் கொண்டவர். 2012ஆம் ஆண்டு காவல் துறையிலிருந்து ஓய்வு பெற்ற ஆர்.என்.ரவி, பின்னர் பிரதமர் அலுவலகத்தில் உளவுப் பிரிவுத் தலைவராக நியமிக்கப்பட்டார். கடந்த 2018ஆம் ஆண்டு தேசிய துணை பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்ட ஆர்.என்.ரவி அடுத்த ஆண்டே நாகாலாந்து ஆளுநராக நியமிக்கப்பட்டார். அங்கு 2 ஆண்டுகள் ஆளுநராக இருந்த ஆர்என் ரவி தற்போது தமிழகத்திற்கு ஆளுநராகியுள்ளார்.
Loading More post
பாகிஸ்தானில் இரண்டு சீக்கியர்கள் சுட்டுக் கொலை - இந்தியா கடும் கண்டனம்
சர்ச்சைக்கு மத்தியில் தாஜ்மஹாலின் பூட்டிய அறைகளின் படங்களை வெளியிட்டது தொல்லியல் துறை!
சென்னையில் ‘ரூட் தல’ விவகாரம்: பயங்கர ஆயுதங்களுடன் மோதிக்கொண்ட கல்லூரி மாணவர்கள்
வருகிறது புது அப்டேட்! ஸ்டேட்டஸ் பிரிவை மிகவும் பயனுள்ளதாக மாற்ற வாட்ஸ்அப் திட்டம்!
அமித் ஷாவுக்கு துணிச்சல் இருந்தால் இதை செய்யட்டும்... ராஜஸ்தான் முதல்வர் சவால்
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?