[X] Close

“நான் நினைத்ததையெல்லாம் சாதித்து விட்டேன் என எண்ணுகிறேன்” - பயிற்சியாளர் ரவி சாஸ்திரி

விளையாட்டு

I-think-I-have-achieved-what-I-Want-to-do-says-Indian-Cricket-Team-Head-Coach-Ravi-Shastri

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார் முன்னாள் இந்திய வீரர் ரவி சாஸ்திரி. எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடருடன் அவரது பதவிக்காலம் நிறைவு பெற உள்ளது. இந்நிலையில் 2017 முதல் இதுநாள் வரையிலான ஐந்து ஆண்டு கால பயிற்சியாளர் அனுபவம் குறித்து மனம் திறந்துள்ளார் அவர். 


Advertisement

image

“எனது பயிற்சியின் கீழ் டி20 உலகக் கோப்பையை இந்தியா வெல்வது சிறப்பான தருணமாக இருக்கும். ஆனால் அதையும் கடந்து இந்திய அணி நிறைய சாதனைகளை இந்த ஐந்து ஆண்டுகளில் செய்துள்ளது. 


Advertisement

ஆஸ்திரேலிய மண்ணில் இரண்டு முறை டெஸ்ட் தொடரில் வெற்றி, இங்கிலாந்து மண்ணில் முன்னிலை. அதிலும் லார்ட்ஸ் மாற்றும் ஓவல் டெஸ்ட் வெற்றிகள் என மனதிற்கு மிகவும் நெருக்கமானவை. எனது 40 ஆண்டுகால கிரிக்கெட் கெரியரில் மறக்க முடியாத தருணம்.   

அது தவிர ஷார்டர் பார்மெட் கிரிக்கெட்டில் சர்வதேச கிரிக்கெட் அணிகளை அவர்களது சொந்த மண்ணில் இந்தியா வீழ்த்தியுள்ளது. இப்படியாக இந்தியா வெற்றிகளை குவித்துள்ளது. இதன் மூலம் நான் நினைத்ததையெல்லாம் நான் சாதித்து விட்டேன் என எண்ணுகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார். 

அதோடு பும்ராவை டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகம் செய்தது, சர்வதேச கிரிக்கெட்டின் டாப் கிளாஸ் வீரர்களுடன் டிரஸ்ஸிங் ரூமை பகிர்ந்து கொண்டது, இந்திய அணியின் வெற்றிகள் என அனைத்தையும் ரவி சாஸ்திரி நினைவு கூர்ந்துள்ளார். 


Advertisement

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை மிகவும் உற்சாகத்துடன் அனுபவித்து இந்திய அணி விளையாடும் என்றும். வெற்றிக்காக ஒட்டுமொத்த திறனையும் அணி வீரர்கள் திரத்துவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

இதையும் படிக்கலாம் : அமீரகத்தில் ஐபிஎல்: முதல் போட்டியே செம்ம வெயிட்டு.. இதுவரை சிஎஸ்கே Vs மும்பை எப்படி? 


Advertisement

Advertisement
[X] Close