Published : 13,Aug 2017 08:40 AM

டிடிவி தினகரன் நாளை முதல் சுற்றுப்பயணம்

TTV-starts-his-party-work-from-tomorrow

அதிமுக அம்மா அணியில் இருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ள டிடிவி தினகரன் நாளை முதல் தனது சுற்றுப்பயணத்தை தொடங்கவுள்ளார்.

முதல்கட்டமாக, மதுரை மாவட்டம் மேலூரில் நாளை மாலை நடைபெறும் பொதுக்கூட்டத்தில அவர் பங்கேற்கிறார். இந்த கூட்டத்தில் அவர் தனது பலத்தைக் காட்ட உள்ள நிலையில், பிரதமரை ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பதால் இரு அணிகள் இணைப்பில் நாளையே முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என அதிமுக வட்டாரங்களில் பேசப்படுகிறது.

முன்னதாக, டிடிவி தினகரன் வெளியிட்ட நியமன அறிவிப்புகள் செல்லாது, அவர் துணைப் பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டதே கட்சியின் சட்டத்துக்கு விரோத‌மானது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் அதிமுக அம்மா அணி சார்பில் நிறைவேற்றப்பட்டன. இந்த தீர்மானத்தில் ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது நியம‌க்கப்பட்ட நிர்வாகிகள் 27 பேர் கையெழுத்திட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்