Published : 17,Sep 2021 03:22 PM

மீண்டும் இணைந்த கூட்டணி: நாளை வெளியாகும் சிலம்பரசனின் அடுத்தப்பட அறிவிப்பு

Actor-Silambarasan-silambarasan-48-movie-next-Announcement-Tomorrow

நடிகர் ’சிலம்பரசன் 48’படத்தின் அறிவிப்பு நாளை வெளியாகவிருக்கிறது.

'விண்ணைத்தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' படத்திற்குப் பிறகு சிலம்பரசன் - கெளதம்மேனன் கூட்டணி 'வெந்து தணிந்தது காடு' படத்தில் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். சிம்புவின் 47-வது படமாக எழுத்தாளர் ஜெயமோகன் திரைக்கதையில் உருவாகும் இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். தாமரை பாடல்கள் எழுதுகிறார். வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.

முற்றிலும் கிராமத்து பின்னணியில் வித்தியாசமான ஆக்‌ஷன் த்ரில்லரில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுவரும் நிலையில், மீண்டும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிப்பில் ‘சிலம்பரசன் 48’ படத்தில் நடிக்கவுள்ளார் சிலம்பரசன். இதற்கான, அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாயுள்ளது. நாளை இப்படத்தின் அறிவிப்பு வெளியாகிறது. 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்