Published : 13,Aug 2017 06:33 AM
மரங்கள் மீது மோதி ஹெலிகாப்டர் விபத்து: 2 போலீசார் உயிரிழப்பு

அமெரிக்காவின் ஜார்லோட்ஸ்வில்லி நகரில் நடத்தப்பட்ட கார் தாக்குதலைத் தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த ஹெலிகாப்டர் தரையில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்லோட்ஸ்வில்லி நகரில் இடம்பெற்ற கார் தாக்குதலைத் தொடர்ந்து அப்பகுதியில் ஹெலிகாப்டர் மூலம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அந்த ஹெலிகாப்டர் குடியிருப்பு பகுதியில் உள்ள மரங்கள் அடர்ந்த பகுதியில் விழுந்து நொறுங்கியுள்ளது. இதில், ஹெலிகாப்டரில் பயணம் செய்த அதிகாரிகள் 48 வயதான எச்.ஜே.கில்லன் மற்றும் 40 வயதான எம்.எம்.பேட்ஸ் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.