Published : 13,Aug 2017 05:30 AM

மாற்றுத்திறனாளி மகனை கொன்று தாய் தற்கொலை: கோவையில் பரிதாபம்

Mother-and-son-suicide

மாற்றுத் திறனாளி மகனை வளர்க்க முடியாத தாய், தன் மகனுக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு, அதே விஷத்தை உட்கொண்டு தானும் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை துடியலூரை அடுத்துள்ள தொப்பம்பட்டி அண்ணாமலை நகர் பகுதியை சேர்ந்தவர் கதிர்பாண்டி, முருகேஷ்வரி தம்பதி. இவர்களுக்கு சபரிஷ் (7), காந்தஸ்ரீ (3) என இரண்டு குழந்தைகள். இதில் சபரிஷ் மாற்றுத்திறனாளி. இதனால் குழந்தையை எங்கும் அழைத்துச் செல்லமுடியாமலும், பராமரிக்க முடியாமலும் வேதனை அடைந்தார் முருகேஸ்வரி.

இந்நிலையில் விரக்தியில் இருந்த அவர், கணவர் தூங்கியதும் தான் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த விஷத்தை எடுத்து சபரிஷ்-க்கு குடிக்க கொடுத்துவிட்டு அவரும் அருந்திவிட்டு படுத்துவிட்டார். காலையில் மனைவி மற்றும் மகன் இருவரும் எழுந்துகொள்ளாமல் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த கதிர்பாண்டி, கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், அவர்கள் இறந்துவிட்டதை உறுதி செய்தனர். இதையடுத்து துடியலூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்