[X] Close

மதுரை: தண்ணீர் லாரியில் அடிப்பட்ட பசு... தொடர்கதையாகி வரும் தெருவோர கால்நடைகளின் அவலநிலை

தமிழ்நாடு

Madurai-street-animals-are-in-trouble-due-to-less-care
மதுரையிலுள்ள பல்வேறு சாலைகளில் மாடு, குதிரை, ஆடு மற்றும் பிற கால்நடைகளை அதன் உரிமையாளர்கள் அலட்சியமாக விடுவதால் அவை உயிரிழக்கும் அபாயம் அதிகரித்து வருகிறது. மாநகராட்சியின் அவலமும் இதிலிருப்பதால், விபத்துகள் தொடர்ந்தவண்ணம் இருக்கின்றன.
இன்று மாலை மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட கே.கே.நகர் பகுதியில் சாலையில் கூட்டமாக 5க்கும் மேற்பட்ட பசுமாடுகள் சுற்றி திரிந்த போது அந்த வழியாக சென்று கொண்டிருந்த மாநகராட்சி தண்ணீர் லாரி ஒன்று எதிர்பாரதவிதமாக பசு ஒன்றின் மீது மோதியது. இதனால் பசு பலத்த படுகாயமடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தது. 
image
அதைக்கண்ட அந்த பகுதியை சேர்ந்த வழக்கறிஞர்கள் 5க்கும் மேற்பட்டோர் பசுவை பத்திரமாக மீட்டு மண்டல கால்நடை மருத்துவமனைக்கு தகவல் அளித்தனர். தொடர்ந்து விரைந்து வந்த கால்நடை மருத்துவர்கள் பசுவிற்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து விபத்துக்குள்ளான பசுமாட்டிற்கு இரண்டு பாட்டில் குளுக்கோஸ் மற்றும் ஊசி செலுத்தப்பட்டது. வழக்கறிஞர்கள் மட்டுமன்றி, பசு மீது வாகனத்தை மோதிய வாகன ஓட்டுனரும் பசுவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சையின் போது அருகிலயே அமர்ந்து உதவி செய்து வந்தார்.
சாலையில் திரிந்த பசுவிற்கு ஏற்பட்ட காயத்திற்கு உடனடியாக சிகிச்சை அளிக்க உதவிய வழக்கறிஞர்களுக்கு அப்பகுதி பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்தனர். கால்நடைகளை சாலைகளில் கேட்பாரின்றி அலைய விடுபவர்கள் மீது மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement
[X] Close