[X] Close

நாமக்கல்: முட்டை விலை உயர்வு

வணிகம்

Egg-rate-increased-in-Namakkal-District-of-Tamil-Nadu-from-today

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 நாட்களுக்கு பிறகு 10 காசுகள் விலை உயர்ந்து 4 ரூபாய் 50 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 


Advertisement

நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலையை 4 ரூபாய் 40 காசுகளிருந்து 10 காசுகள் உயர்த்தி 4 ரூபாய் 50 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. நாமக்கல் மண்டலத்தில் கடந்த 4-ம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 20 காசுகளில் இருந்து 10 காசுகளும், 6-ம் தேதி 10 காசுளும் உயர்ந்து பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகளாக இருந்தது.

image


Advertisement

இந்நிலையில் 10 நாட்களாக விலையில் எவ்வித மாற்றமும் இன்றி இருந்த நிலையில் இன்று பண்ணை கொள்முதல் விலை 10 காசுகள் உயர்ந்து 4 ரூபாய் 50 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 10 நாட்களுக்கு பிறகு விலை உயர்வு குறித்து கோழி பண்ணையாளர்கள் கூறும் போது கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக முட்டை விற்பனை சீராக இருந்த நிலையில் தமிழகம், கேரளாவிற்கு முட்டை தேவை சற்று அதிகரித்துள்ள நிலையில் விலை உயர்த்தப்படுவதாகவும், அதே சமயம் நாளை முதல் புரட்டாசி மாதம் துவங்க உள்ளதால் அசைவம் சாப்பிடுவோர் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளதால் இவ்விலை வரும் நாட்களில் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் கோழிப் பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.


Advertisement

Advertisement
[X] Close