[X] Close

காய்ச்சல்தானே என்று அஜாக்கிரதையாக இருக்கக்கூடாது: விஜயபாஸ்கர்

Fever-is-a-serious-issue-says-Health-minister-Vijayabaskar

காய்ச்சல் என பொதுமக்கள் யாரும் அஜாக்கிரதையாக இருக்க வேண்டாம் என்றும், உடனடியாக அரசு மருத்து‌மனைகளில் பரிசோதித்து சிகிச்சை மேற்கொண்டால் காய்ச்சலை எளிதாக குணப்படுத்தலாம் எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரி‌வித்துள்ளார்.


Advertisement

சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டபின் செய்தியாளர்களிடம் பேசிய விஜயபாஸ்கர், காய்ச்சல்தானே என்று பொதுமக்கள் யாரும் அஜாக்கிரதையாக இருக்க வேண்டாம் என்றும், காய்ச்சலுக்கு உடனடியாக அரசு மருத்துவமனைகளில் பரிசோதனை செய்தால் எளியாக குணப்படுத்தலாம் என்றும் கூறினார். அரசு மருத்துவமனைகளில் உயர்ரக பரிசோதனைக் கருவிகளும், மருத்துவ முறைகளும் கையாளப்படுவதாவும் கூறினார்.

நீட் தேர்வு பிரச்னைக்கு ஓரிரு நாட்களில் தீர்வு காணப்படும் என்று அமைச்சர் கூறினார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close