[X] Close

“மாடுகள் எங்க பிள்ளைங்க” - ட்ரெண்டிங்கில் ‘ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்’ ட்ரெய்லர்

சினிமா

வரும் 24-ஆம் தேதி ஆண்டு ‘ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்’ திரைப்படம் ஓடிடி தளமான அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது. நடிகை வாணி போஜன், ரம்யா பாண்டியன் இதில் நடித்துள்ளனர். கிராமத்து பின்னணியில் இந்த படம் உருவாகி உள்ளது. நடிகர் சூர்யா - ஜோதிகா இணைந்து இந்த திரைப்படத்தை 2D பேனரில் தயாரித்துள்ளார்.  


Advertisement

இன்று வெளியான இந்த ட்ரெய்லருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஜல்லிக்கட்டு குறித்த காட்சிகளும், மாடுகளை செல்லப் பெயர்கள் வைத்து தங்கள் வீடுகளில் ஒருவராக வளர்க்கும் கிராமத்து மனிதர்களின் யதார்த்த வாழ்க்கை குறித்த கதை போல் ட்ரெய்லர் உள்ளது. சில சமூக பிரச்னைகளையும் பேச முயற்சிப்பது போல் சில இடங்களில் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. 


Advertisement

இதையும் படிக்கலாம் : உலக அரங்கில் ’கீழடி’ : யார் இந்த அமர்நாத் ராமகிருஷ்ணன்? தமிழகத்தில் இவ்வளவு வரவேற்பு ஏன்? 


Advertisement

Advertisement
[X] Close