Published : 14,Sep 2021 08:02 PM

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் ‘யார்க்கர் கிங்’ லஷித் மலிங்கா!

Sri-Lankan-Ace-Fast-Bowler-and-Yorker-King-Lasith-Malinga-announced-retirement-from-all-forms-of-cricket

இலங்கை அணியின் தலைசிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவரான லஷித் மலிங்கா அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவரது துல்லியமான யார்க்கர்களால் எதிரே நிற்கும் பேட்ஸ்மேன்களை திக்குமுக்காட செய்தவர். 

image

அதுவும் குறிப்பாக எதிரணி பேட்ஸ்மேன்களின் ரன்களை கட்டுப்படுத்து தற்போது பவுலர்கள் வீசும் யார்க்கர்களுக்கு மலிங்கா தான் தொடக்காப்புள்ளி. 2007 மற்றும் 2011 - 50 ஓவர் உலகக் கோப்பையில் இலங்கை அணி இறுதி போட்டி வரை முன்னேற மலிங்காவும் ஒரு காரணம். 

30 டெஸ்ட், 226 ஒருநாள் மற்றும் 84 டி20 போட்டிகளில் இலங்கை அணிக்காக விளையாடி உள்ளார். கடைசியாக இலங்கை அணிக்காக 2020 மார்ச்சில் அவர் விளையாடி இருந்தார். டி20 தொடரில் இருந்து விலகியதன் மூலம் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற்றார் மலிங்கா. 

2007 உலகக் கோப்பையில் நான்கு பந்துகளில் நான்கு விக்கெட்டுகளை சாய்த்து சாதனை படைத்தவர். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் பவுலர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் அவர். ஐபிஎல் தொடரில் மும்பை இன்டியன்ஸ் அணிக்காக மலிங்கா விளையாடி உள்ளார். 

இதையும் படிக்கலாம் : NIRF ரேங்கிங்கில் பின்தங்கிய புதுச்சேரி யூனியன் பிரதேச கல்விக் கூடங்கள் 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்