[X] Close

சிவகாசி: அண்டை வீட்டார் பிரச்னையில் 4 வயது குழந்தையைக் கொன்ற 2 சிறுவர்கள்

தமிழ்நாடு

four-years-old-boy-murdered-by-two-small-kids

சிவகாசி அருகே அக்கம் பக்கத்து வீட்டு பிரச்னையில், 4 வயது குழந்தையை கிணற்றில் தள்ளி கொலை செய்த 2 சிறுவர்கள் கைது செய்யபட்டுள்ளனர்.


Advertisement

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர்கள் பார்த்திபன் - கவியரசி. இந்த தம்பதியருக்கு பிரியதர்ஷன்(8) தீனதயாளன்(4) ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்களின் பக்கத்து வீட்டில் வசிப்பவர் அல்போன்சா. இவர் வீடு கட்டுவதற்காக வீட்டிற்கு முன்பு மணல் இறக்கி வைத்துள்ளார். அந்த மணலில் பார்த்திபனின் மகன் தீனதயாளன் விளையாடிக் கொண்டிருந்ததை கண்டு அல்போன்சா சத்தம் போட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பார்த்திபன் அல்போன்சாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

image


Advertisement

இந்த பிரச்சனை இரு குடும்பத்திற்கும் இடையே வாக்குவாதம் முற்றி சண்டையாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த அல்போன்சாவின் பேரன்கள் பிரவீன்குமார்(13) மற்றும் அஜய்(11)ஆகிய இரண்டு பேரும் சேர்ந்து பார்த்திபனின் மகன் தீனதயாளனை கடைக்கு வருமாறு அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை காணவில்லை என்று பார்த்திபன் மற்றும் அவரது மனைவி அக்கம் பக்கம் தேடியுள்ளனர். குழந்தை காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து சிவகாசி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் போலீசார் அல்போன்சாவின் குடும்பத்தினரிடம் விசாரணை செய்தனர்.

இதில் பிரவீன் குமார் மற்றும் அஜய் ஆகிய இருவரும் சேர்ந்து 4 வயது குழந்தை தீனதயாளனை கிணற்றுக்குள் தள்ளி கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர். இந்த நிலையில் விஸ்வநத்தம் பகுதியில் உள்ள கிணற்றுக்குச் சென்று காவல்துறையினர் சடலமாக கிடந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து சிவகாசியில் நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 2 சிறுவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement

Advertisement
[X] Close