மணல் மற்றும் கல் குவாரிகளில் விதிமீறல் நடந்தால் அதன் உரிமத்தை ஆட்சியர்கள் ரத்து செய்யவேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டிருக்கிறது.
விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என குவாரிகளில் அதிகாரிகள் அவ்வப்போது சோதனை செய்யவும் நீதிமன்றம் ஆணை பிறப்பித்திருக்கிறது. மேலும் குவாரியில் இருந்து கல், மணலுடன் வெளியேறும் லாரி பாஸ்களில் தேதி, நேரம் கட்டாயம் எழுதியிருக்க வேண்டும் எனவும் கூறியிருக்கிறது.
நாகர்கோவில் மண்டல கல், மணல் ஏற்றிச்செல்லும் லாரி உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் செயலாளர் டென்னிஸ்கோல்டு, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,"குவாரிகளில் இருந்து ஒவ்வொரு யூனிட் மணல், கற்களுக்கும் நிர்ணயிக்கப்பட்டு உள்ள தொகையை நாங்கள் வரியுடன் செலுத்தி, அவற்றை எடுத்து வருகிறோம். ஒவ்வொரு முறையும் லாரி ஏற்றிச்செல்லும் பொருளுக்கான அடையாள அட்டையை (பாஸ்) கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களின் கனிமவள அதிகாரிகள் வழங்குகின்றனர். இந்த அடையாள அட்டையில் கனிமவள அதிகாரிகள் சீல் வைத்து, குவாரியை சேர்ந்தவர்களிடம் கொடுத்துவிடுகின்றனர். அவர்களிடம் எங்கள் லாரி டிரைவர்கள் பெற்றுச்செல்லும் வழக்கம் இருந்து வருகிறது. அந்த அடையாள அட்டையில் வண்டி எண், தேதி, நேரம், பயண நேரம், இடம் என அனைத்து விவரங்களும் தெரிவிக்கப்பட வேண்டும். லாரியில் ஒவ்வொரு நடைக்கும் தனித்தனியாக பாஸ் வழங்கப்பட வேண்டும்.
ஆனால் குவாரிகளில் இருந்து பொருட்களை எடுத்து செல்லும் குறிப்பிட்ட சில லாரிகளில் ஒரேயொரு பாஸ் மூலம் பலமுறை மணல், கற்களை ஏற்றிச்செல்கிறார்கள். இதன்மூலம் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தப்படுகிறது. இந்த பாஸ்களில் தேதி, நேரத்தை எண்ணாலும், எழுத்தாலும் எழுத வேண்டும் என ஏற்கனவே பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. அவை முறையாக பின்பற்றப்படவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த பலனும் இல்லை. எனவே இந்த வழிகாட்டுதல்களை பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
மாணவர்கள் மனதை திடப்படுத்திக்கொண்டு போராட வேண்டும் - அமைச்சர் சிவசங்கர்
இந்த வழக்கு நீதிபதி சுரேஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்கள் தரப்பில் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், மனுதாரரின் குற்றச்சாட்டுகள் குறித்து முறையாக கண்காணிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து நீதிபதி, குவாரிகளில் இருந்து வெளியேறும் லாரிகள், தங்களுக்கான பாஸ்களில் தேதி, நேரத்தை எண்ணாலும், எழுத்தாலும் கண்டிப்பாக எழுதியிருக்க வேண்டும். இதை அதிகாரிகள் அவ்வப்போது சோதனை செய்ய வேண்டும். மீறும் குவாரிகளின் உரிமத்தை ரத்து செய்ய மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.
Loading More post
"மற்ற ஆறு பேரும் விரைவில் விடுதலை ஆவார்கள்" - நளினியின் வழக்கறிஞர் பேட்டி
“தம்பி பேரறிவாளன் வேலூர் சிறையிலிருந்தது என்னால்தான் வெளியே தெரிந்தது” - சீமான் பேச்சு
'முதலில் சுதந்திரக் காற்றை சுவாசித்து கொள்கிறேன்! மற்றதெல்லாம் அப்புறம்தான்!' - பேரறிவாளன்
நெல்லை கல்குவாரி விபத்து - 30 மணி நேர போராட்டத்துக்கு பின் 5வது நபர் சடலமாக மீட்பு!
”அமைச்சர்களுக்கு தமிழ் தெரிந்தாலே போதும்” - அண்ணாமலை கருத்துக்கு செல்லூர் ராஜு பதில்!
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்