நீட் விலக்கு மசோதா தாக்கல்
தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதவை தாக்கல் செய்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வை ரத்து செய்து 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களை மருத்துவக் கல்லூரியில் சேர்க்க அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்து வருவதாக தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது தான் தமிழகத்தில் முதன் முதலில் நீட் தேர்வு நடத்தப்பட்டது என்றும், தொடக்கத்தில் இருந்தே திமுக நீட் தேர்வை எதிர்த்து வருகிறது எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
அதிமுக வரவேற்பு - திமுகவுக்கு ஈபிஎஸ் கேள்வி
இதனை தொடர்ந்து சட்டமுன்வடிவு பேரவையில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, 2010 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் தான் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதாக கூறினார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை குழந்தைகள் இறப்புக்கு யார் காரணம் என பேசவேண்டாமா? என கேள்வி எழுப்பினர். இதனால் அவையில் சற்று நேரம் சலசலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேரும் வகையில் கடந்த அதிமுக ஆட்சியில் 7.5 சதவிகித இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்டதாக தெவிரித்தார். தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் நீட் தேர்வுக்கு எதிரான சட்டத்தை அதிமுக வரவேற்பதாக கூறினார்.
பாஜக எதிர்ப்பு
தமிழகத்தில் ஆண்டுக்கு ஆண்டு நீட் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சட்டத்தை எதிர்ப்பதாக பாஜக சட்டமன்ற குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். அப்போது குறுக்கிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எத்தனைபேர் தேர்ச்சி பெற்றார்கள் என்பதைவிட 15 மாணவர்கள் உயிரிழந்தததை கணக்கில் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டார். மாணவர்களின் இறப்புக்கு யார் காரணம் என்பது அவரவர் மனசாட்சிக்கு தெரியும் என கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டத்தை ஒரு மனதாக நிறைவேற்றித் தரவேண்டும் என கேட்டுக்கொண்டார்.
பாஜக தவிர்த்து இதர கட்சிகள் ஆதரவு
பாஜக வெளிநடப்பு செய்த நிலையில், சட்ட முன்வடிவு குறித்து காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், பாமக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சியினர் வரவேற்று பேசினர். இதனை தொடர்ந்து குரல் வாக்குகெடுப்பு மூலம் நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. மசோதாவுக்கு குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது.
நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வகை செய்யும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேறியுள்ள நிலையில், இதனை சட்டமாக்கும் சாத்தியங்கள் குறித்து வல்லுநர்கள் கூறும் கருத்துகளை பார்க்கலாம்.
கற்பக விநாயகம், ஓய்வு பெற்ற நீதிபதி
“நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் தமிழ்நாடு இளநிலை மருத்துவ படிப்பிற்கான சேர்க்கைச் சட்டம் - 2021 தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மசோதா நிறைவேறினாலேயே நீட் விலக்கு அமலுக்கு வராது என்றும் நீட்டுக்கு விலக்கு பெற அனைத்துக்கட்சிகளும் ஒருங்கிணைந்து பிரதமரை சந்தித்து வலியுறுத்தலாம். ஆனால், உச்சநீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால், சட்டரீதியாக அணுகலாம்” என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்மணி, வழக்கறிஞர்
“தேசிய அளவில் நீட் நுழைவுத்தேர்வு நடத்தப்படுவதால், தமிழ்நாட்டுக்கு விலக்கு கிடைப்பதற்கான சாத்தியங்கள் குறைவே” என்கிறார் வழக்கறிஞர் தமிழ்மணி.
மருத்துவ கல்வி படிப்பிற்கான சேர்க்கையை இந்திய அரசியலமைப்பின் 7-வது அட்டவணையின் 3-வது பட்டியலில் உள்ள 25-வது உள்ளீட்டின்படி மாநில அரசே முறைப்படுத்த தகுதியுடையதாக உள்ளதாக தமிழக அரசு தனது மசோதாவில் தெரிவித்துள்ள நிலையில் அடுத்த கட்ட நகர்வு சட்டரீதியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி
நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் தமிழக அரசின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துவதாக கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி தெரிவித்துள்ளார். இது பெரும் சட்டப் போராட்டம் தான் என்றாலும் கூட வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
Loading More post
கோயம்பேடு சந்தை: பெட்ரோல், டீசல் விலை குறைவால் சரிந்தது தக்காளி விலை! இன்றைய நிலவரம் என்ன?
காஷ்மீரில் பட்டப்பகலில் போலீஸ் காவலர் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் அட்டூழியம்
மில்லரின் 'கில்லர்' பேட்டிங் - ராஜஸ்தானை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறிய குஜராத்
கடல்பாசி எடுக்க சென்ற பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை? எரித்துகொல்லப்பட்ட அவலம்
சென்னையில் பாஜக நிர்வாகி வெட்டிக் கொலை - முன்விரோதம் காரணமா?
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!