நீட்தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவர் தனுஷின் குடும்பத்துக்கு, 10 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என அதிமுக தெரிவித்துள்ளது.
நீட் தேர்வுக்கு தயாராகி வந்த சேலம் மாவட்டம், மேட்டூரைச் சேர்ந்த மாணவர் தனுஷ், திடீரென தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இவரது மரணத்துக்கு திமுக அரசுதான் முழுபொறுப்பு ஏற்க வேண்டும் என கூறியுள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர், இறந்த மாணவரின் குடும்பத்துக்கு அதிமுக சார்பில் 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் எனக் கூறியுள்ளனர்.
மேலும், தனுஷின் குடும்பத்துக்கு அரசு சார்பில் ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்குவதோடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதேபோல, சமூகவிரோதிகளால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வாணியம்பாடியைச் சேர்ந்த வசீம் அக்ரம் குடும்பத்துக்கு அதிமுக சார்பில் 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அதிமுக தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
Loading More post
கியான்வாபி மசூதியில் சிவலிங்கமா? உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை
ட்விட்டரில் திடீரென டிரெண்டான விஜய்யின் 'பீஸ்ட்' கிளைமேக்ஸ் காட்சி - என்ன காரணம்?
ஐபிஎல் 'பிளே-ஆஃப்' ரேஸில் முந்தியது டெல்லி: பஞ்சாப் பரிதாப தோல்வி
சர்வதேச பத்திரிகை புகைப்படக் கலைஞர் விருது பெற்ற மதுரைக்காரர்: யார் அவர்? என்ன சாதனை?
நெல்லை கல்குவாரி விபத்து: பெரும் போராட்டத்துக்குப் பின் 4-வது நபர் சடலமாக மீட்பு
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?